Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அறிவியல் ஆயிரம்

சிம்பன்சியின் மகத்துவம்

சிம்பன்சி குரங்குகள் காயமடைதல், நோய் உள்ளிட்ட தன் உடல்நல பாதிப்புகளுக்கு சுயமாகவே மருத்துவம் செய்து கொள்கின்றன என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இவை சாப்பிடும் தாவரங்களில் பெரும்பாலானவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய மருத்துவ குணம் உள்ளவை என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். மனிதர்களை விட காடுகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் சிம்பன்சி, மேலும் புதிய மருந்துப் பொருட்களை கண்டறிவதற்கு தேவையானவற்றை நமக்கு காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

ஒலிம்பிக், விதவை தினம்

* பல காரணங்களால் கணவனை இழந்து தவிக்கும் விதவைகள் மறு வாழ்வுக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் உலக விதவைகள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி பேர் விதவைகளாக உள்ளனர். இதில் பத்தில் ஒருவர் வறுமையில் உள்ளனர்.

* நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு வகை விளையாட்டு அடங்கியுள்ளன. உலகளவில் இப்போட்டி நடப்பதால் இதில் பதக்கம் வெல்வது வீரர்களின் கனவாக உள்ளது. ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கடை பிடிக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us