PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
கை வீசி நடப்பது ஏன்
நடைபயிற்சியின் போது, இடது காலை முன் வைக்கும் போது, வலது கையை பின்னோக்கியும், வலது காலை முன்முவைக்கும் போது இடது கையை பின்னோக்கியும் வீசிய படி நடக்கிறோம். கைகளை முன், பின் அசைக்காமல் நடப்பது கடினம் உடலின் பல்வேறு பாகங்கள் அங்கும் இங்கும் திரும்பும்போது, நமது உடலின் புவி ஈர்ப்பு மையமும் அங்கும் இங்கும் நகரும். அவ்வாறு நகரும்போது நாம் கீழே விழும் வாய்ப்பு உண்டு. எனவே புவி ஈர்ப்பு மையத்தைச் சமன் செய்து, கீழே விழாமல் இருக்கவே கைகளை முன்னும் பின்னும் நாம் அசைக்கிறோம்.
தகவல் சுரங்கம்
உலக சுற்றுச்சூழல் தினம்
பூமியில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு வகை மாசுபாடு, நமது நிலம், நீர், காற்றை மாசுபடுத்துகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது. அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. 'நிலவு மறுசீரமைப்பு, வறட்சியை தாங்கும் திறன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.