PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM

செவ்வாயில் உயிரினங்கள்
சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து செவ்வாய் உள்ளது. பூமியில் இருந்து 22.8 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கோளில் சில இடங்களில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருந்ததை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பல ஆண்டுகளாக ரோவர், ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ததில் ஆறுகள், ஏரிகள் இருந்திருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.