PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

நான்கு கிரகணம்
இந்தாண்டு (2025) நான்கு கிரகணம் ஏற்படுகிறது. மார்ச் 14ல் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் தெரியவில்லை. அடுத்து மார்ச் 29ல் பகுதி சூரிய கிரகணம் வருகிறது. பின் செப். 7ல் முழு சந்திர கிரகணம், செப். 21ல் பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமி நடுவில் வந்து சூரிய ஒளியை மறைப்பதால், பூமியின் நிழல் நிலவில் விழுகிறது. சூரிய கிரகணம் என்பது நேர்கோட்டில் சூரியன், நிலவு, பூமி வரும்போது நடுவில் உள்ள நிலவு சூரியஒளியை மறைக்கிறது. அதன் நிழல் பூமியில் விழுகிறது.