PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

கண்ணாடி தயாரிக்கும் முறை
முகம் பார்த்தல், கண் பார்வை, வாகனம், ஜன்னல், அறிவியல் ஆய்வக கண்ணாடி என பல விதமான கண்ணாடிகள் உள்ளன. இதில் சில ஒளி ஊடுருவும், சில ஊடுருவாது. கண்ணாடியானது சிலிக்கா (மணல்), கால்சியம் கார்பனேட் (சுண்ணாம்புக்கல்), சோடியம் கார்பனேட் வேதிப்பொருள்களால் ஆனது. இவற்றை அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும்போது அக்கலவை உருகிப் பாகுபோல ஆகிவிடும். உருகிய கண்ணாடியை வெவ்வேறு வடிவிலான வார்ப்புகளில் ஊற்றி அதை ஒரே சீராகவும், மெதுவாகவும் குளிரச் செய்து கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.