Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அக்கம் பக்கம்/ துன்பம் வந்தால் சிரிங்க!

 துன்பம் வந்தால் சிரிங்க!

 துன்பம் வந்தால் சிரிங்க!

 துன்பம் வந்தால் சிரிங்க!

PUBLISHED ON : டிச 01, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
'அரசியல்வாதிகளுக்கு எப்படி பேச வேண்டும் என்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்...' என, தெலுங்கானா முன்னாள் அமைச்சரும், பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவருமான, கே.டி.ராமாராவை கிண்டலடிக்கின்றனர், இங்குள்ள மக்கள்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடந்தது.

அப்போது, ஹைதராபாதில் சர்வதேச கார் பந்தயம் நடந்தது. அந்த கால கட்டத்தில் அமைச்சராக இருந்தவரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் தான், இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்த கார் பந்தயத்தை நடத்தியதில், 33 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

அதன் பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, இந்த முறைகேடு குறித்த விசாரணைக்காக, கவர்னரின் ஒப்புதல் கோரியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது இந்த விசாரணைக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

இதுகுறித்து, ராமாராவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'காங்கிரஸ் கட்சியினர் என்னை ஜெயிலுக்குள் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர். அப்படி ஜெயிலுக்கு போனாலும், அதை எனக்கு சாதகமாக பயன்படுத்துவேன். எடையை குறைக்க ஜெயிலுக்குள் உடற்பயிற்சி செய்வேன். யோகா பயிற்சிகளை செய்வேன்...' என, சிரித்தபடியே பதில் அளித்தார்.

தெலுங்கானா மக்களோ, 'துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்க வேண்டும் என்பதற்கு, ராமாராவ் சிறந்த உதாரணம்...' என, கிண்டலடிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us