ADDED : ஜூலை 07, 2022 09:47 AM

வாழ்வில் முன்னேற நேர்மை அவசியம். பொய் சாட்சி கூறுவது, பிறர் சொத்தை அபகரிப்பது, ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வது, சுயநலத்துடன் வாழ்வது இவை யாவும் நல்ல சமுதாயத்திற்கான அடையாளம் இல்லை. தீய செயல் செய்பவர்களிடம் ஒற்றுமை அதிகம். நேர்மையானவர்கள் துணிந்து செயல்படாததால் ஒழுக்கம் பெயரளவில் உள்ளது. நல்லவர்களை கண்டறிந்து அவர்களுக்குரிய மரியாதையை சமூகம் தந்தால் அவர்கள் இன்னும் நன்றாக வாழ்வர்.