
கெட்ட குணம் கொண்டவரைக் கூட நமது அன்பான பார்வையால் நல்லவராக மாற்ற முடியும். அதற்கு முதலில் நம் மனதில் அமைதி தவழ வேண்டும். அமைதி தவழ என்ன செய்யலாம்... நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறரிடம் எப்போதும் புன்னகையுடன் பேசுங்கள். அப்படி செய்வதால் உங்களின் நட்பு வட்டம் விரியும். பிறரிடம் புன்முறுவல் காட்டுவது சிறந்த தர்மம் என்கிறார் நாயகம்.