ADDED : ஜூன் 14, 2024 01:09 PM
நபி ஹஜ்ரத் இப்ராகிம் தன் மகன் இஸ்மாயிலை குர்பானி கொடுக்க முயன்றார். அப்போது அங்கு தோன்றிய வானவர் ஜிப்ரீல், 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்' என்றார். இதைக் கேட்ட இப்ராகிம் நபி, 'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று கூறினார். உடனே மகன் இஸ்மாயில், 'அல்லாஹு அக்பர்! வலில்லாஹில்ஹம்து' என்றார். இதன் அடிப்படையில் தான் இன்றும் குர்பானி கொடுக்கும் போது மேலே குறிப்பிட்ட இந்த தக்பீரை ஓதுகிறார்கள்.