ADDED : டிச 01, 2023 09:16 AM

முஃமின்களில் (மார்க்கநெறிகளைப் பின்பற்றுபவர்) ஆணோ, பெண்ணோ ஏழைகளாக இருக்கின்றார்கள் என்பதற்காக அவர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் நினைக்கக்கூடாது. மீறி எவர் நினைப்பார்களோ, அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்களோ, அவர்களிடம் இல்லாத குறைகளை அவர்கள் மீது சுமத்துவார்களோ அத்தகையோரை மறுமை நாளில் இறைவன் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான்.