ADDED : நவ 10, 2023 10:23 AM
நேரத்துக்கு தொழுவது, பொருள் கையை விட்டுப் போவதற்கு முன் தர்மம் செய்வது, வயதும், காலமும் வீணாகும் முன் நன்மை செய்வது, வயது வந்த மகளுக்கு திருமணம் செய்து வைப்பது, மரணம் வரும் முன்பே மறுமைக்குரிய நற்செயல்களில் ஈடுபடுவது, சண்டை சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்ப்பது, மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடுவது, வாங்கிய கடனை மறக்காமல் தருவது போன்ற செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.