ADDED : நவ 14, 2024 01:50 PM
'பெற்றோருக்கு நன்றியுடன் இருப்பவன் நரகம் செல்ல மாட்டான். பெற்றோருக்கு தீங்கு செய்பவன் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறான் இறைவன். ஒருமுறை நபிகள் நாயகத்திடம், ''மனிதன் செய்ய வேண்டிய கடமைகளில் சிறந்தவை எவை” என அப்துல்லாஹ் கேட்டார். அதற்கு, ''நேரம் தவறாமல் தொழுகை செய்தல், பெற்றோருக்கு நன்றி செலுத்துதல்'' என்றார்.