
மனம் மென்மையானதாக இருக்க வேண்டும். பெற்றோர், மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி அனைவரிடமும் மென்மையாக நடப்பவனே உயர்ந்த மனிதன். மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆவான். இறைவன் மென்மையான இயல்புடையவன். அதனால் அதையே அவன் விரும்புகிறான். மென்மையை கையாளும் மனிதனுக்கு நற்கூலி அளிக்கிறான்.