Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/ஹஜ் பெருநாள்

ஹஜ் பெருநாள்

ஹஜ் பெருநாள்

ஹஜ் பெருநாள்

ADDED : ஜூன் 14, 2024 01:14 PM


Google News
இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவதான துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் ஹஜ் பெருநாள். இஸ்லாத்தின் ஐந்தாவது துாண் ஹஜ் பெருநாள்.

அரேபியாவில் மெக்கா நகரிலுள்ள காபாவிற்கு செல்லும் பயணத்திற்கு ஹஜ் என்று பெயர். வசதியானவர்கள் ஜகாத் (தானம்) செய்வது கட்டாயம். அதுபோல பணவசதி, உடல் நலம் உள்ளவர்கள் காபாவுக்கு பயணம் செய்வது கட்டாயம். புனித பயணம் செய்யும் இடங்களில் முதலிடம் பெறுவது காபா. நபிகள் நாயகம் காலத்திற்கு முன்பே அரேபியர்கள் ஹஜ் யாத்திரை சென்றனர்.

தங்களின் முப்பாட்டனார்களான இப்ராகிம், இஸ்மாயில் போன்றோரின் பாரம்பரிய செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். பின்பு தொழுகை முடிந்த பின் இறைவனுக்காக ஆடு, ஒட்டகத்தை பலியிடுகின்றனர்.

'ஹஜ் செல்பவர்களை பிறந்த குழந்தையை போன்றவர்கள்' என்கிறார் நபிகள் நாயகம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us