Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/முத்தான மூன்று

முத்தான மூன்று

முத்தான மூன்று

முத்தான மூன்று

ADDED : ஜூன் 07, 2024 11:04 AM


Google News
ஒரு மனிதன் இறந்து விட்டால் உலக ரீதியான தொடர்புகள் அனைத்தும் மறையும். ஆனால் முத்தான மூன்று செயல்கள் மட்டும் ஒருவனைப் பின்தொடரும்.

ஒன்று நீண்ட கால பலன் தரும் விதத்தில் அமைந்த தர்மங்கள். நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் அதனடியில் பலரும் இளைப்பாறுவர். அந்த மரத்தின் காய், கனிகளை சுவைத்து பசியாறுவர். இரண்டாவது கல்விக்காக அளிக்கும் நிதியுதவி நீடித்த பலன் தரும். ஏனெனில் ஒருவர் கல்வி கற்பதால் அவரது குடும்பம் மட்டுமின்றி சமுதாயத்திற்கும் நன்மை கிடைக்கிறது.

மூன்றாவதாக ஒழுக்கமுள்ள குழந்தைகளின் பெற்றோராக இருத்தல். நல்ல குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் கல்வியாளராக, அறிஞராக, சமூக சேவகர்களாக விளங்குவர். அப்போது அவர்களால் பெற்றவர்களுக்கும் பெருமையும் புகழும் உண்டாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us