ADDED : ஜூன் 07, 2024 11:02 AM
ஹிஷாம் (ரலி) என்பவர் நபிகள் நாயகத்திடம், ''தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது'' எனக் கேட்டார்.
அதற்கு அவர், ''மணியோசை போல வேத அறிவிப்பு வரும். வானவர் கூறியதை நான் மனப்பாடம் செய்ததும் அந்த மணியோசை என்னை விட்டு விலகும். சில வேளைகளில் மனிதரைப் போல வானவர் காட்சியளித்து உரையாடுவர். அப்போது அவர் கூறுவதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வேன்'' என்றார்.
'கடுங்குளிர் வீசும் நாளில் நபிகள் நாயகத்திற்கு வேத அறிவிப்பு வருவதை பார்த்துள்ளேன். அறிவிப்பு நின்ற பின் அவரது நெற்றியில் இருந்து வியர்வை அரும்புவதைக் கண்டேன்' என்கிறார் ஆயிஷா(ரலி).