Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

ADDED : மே 24, 2024 09:09 AM


Google News
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) என்பவரிடம் தன் மகனை அழைத்துக் கொண்டு வந்தாள் ஒரு பெண்.

''இவன் என் மகன். தினமும் எதையாவது திருடுகிறான். கண்டித்தும் திருந்தவில்லை. புத்திமதி சொல்லுங்கள்'' என முறையிட்டாள்.

அவரும் அறிவுரைகளை வழங்கினார். மீண்டும் சில நாட்களுக்கு பிறகு வந்த அந்தப் பெண், ''இமாம் அவர்களே. எனது மகன் தற்போது திருடுவதில் வல்லவனாகி விட்டான்'' எனச் சொல்லி அழுதாள்.

இதைக்கேட்ட அவர், ''அழாதீர்கள். நீங்கள் கர்ப்பமாக இருந்த போது எதையாவது திருடுனீர்களா...'' எனக்கேட்டார்.

அதற்கு சிறிது நேரம் யோசித்த பிறகு, ''பக்கத்து வீட்டில் இருந்த அழகான பாத்திரம் ஒன்றை திருடினேன்'' என்றாள்.

''அன்று நீங்கள் செய்த தவறால் உங்கள் மகன் இன்று திருடனாகி விட்டான்'' என்றார்.

பார்த்தீர்களா... தாய் செய்த தவறு மகனின் வாழ்க்கையை பாதிக்கிறது எனவே ஒழுக்கமாக இருங்கள் வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us