
முஸ்லிம்களை தாக்க மெதீனாவை நோக்கி வந்தனர் குரைஷிகள். இவர்களை எதிர்த்து போரிட நபிகள் நாயகம் நகருக்கு அருகிலுள்ள 'உஹத்' குன்றுக்கு வந்தார். வீரர்கள் குன்றின் முன் அணிவகுத்து நின்றனர். அதன் பக்கவாட்டில் கணவாய் ஒன்று இருந்தது. அதன் வழியாக குரைஷிகள் திடீரென வந்து தாக்கலாம் எனக் கருதி வீரர்களை நிறுத்தினார். அதில் முஸ்அப் இப்னு உமைர் கொடியைத் தாங்கி நிற்கும் பணியிலும், ஸூபைர் இப்னு அவ்வாம் படைக்குத் தலைவராகவும், ஹம்ஸா கவசம் அணியாத படைகளுக்குத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர்களிடம், 'சண்டையின் முடிவு வெற்றியோ, தோல்வியோ யாரும் அங்கிருந்து நகராதீர்கள்' எனக் கட்டளையிட்டார். இப்படி வெற்றிக்கான வியூகம் அமைக்கப்பட்டது.