எதிரிகளான குரைஷிகள் மெதீனாவை தாக்க வருவதை அறிந்தார் நபிகள் நாயகம். அன்று இரவு கனவு கண்டார். காலையில் இதைப் பற்றி தோழர்களிடம் தெரிவித்தார்.
'போரில் என் வாளின் நுனி சிறிது முறிந்ததால், நஷ்டம் உண்டாகும். அதுபோல் என் கைகளை ஒரு கவசத்தில் வைத்திருந்தேன். அதாவது மெதீனா நகரமே பாதுகாப்பான இடம். இதற்குள் இருந்து கொண்டே சண்டையிட வேண்டும். சில பசுக்கள் அறுக்கப்படுவதை கண்டேன். நம்மைச் சேர்ந்த சிலர் கொல்லப்படுவார்' என்றார்.
இதற்கு தோழர்கள், 'அருகிலுள்ள கோட்டைகளுக்கு பெண்களை அனுப்பி விட வேண்டும். முன்பு நடந்த பத்ரு போரில் கலந்து கொள்ளாத இளைஞர்கள் நகரை விட்டு வெளியே சென்று குரைஷிகளை தாக்க வேண்டும்' என தெரிவித்தனர்.