ADDED : மார் 13, 2025 03:03 PM
பூமியில் இறந்த ஒரு மனிதன் மறுமை நாளில் இறைவன் முன்பு நிறுத்தப்பட்டான். அவனிடம், 'ஆதமின் மகனே... அன்று ஒருநாள் நான் தாகத்தால் வாடினேன். எதிரில் வந்த உன்னிடம் தண்ணீர் கேட்டேன். ஆனால் தண்ணீர் வைத்திருந்த போதிலும் தர மறுத்தாய்' என்றான். அதற்கு அந்த மனிதன், 'இந்த உலகத்தின் அதிபதியான உனக்கு எப்படி நான் தண்ணீர் தர முடியும்' என பதிலளித்தான்.
அப்போது தன் அடியார் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைத்து, 'இந்த நபர் இந்த நாளில் இந்த நேரத்தில் தண்ணீர் கேட்டார். ஆனால் நீ தரவில்லையே' என ஞாபகப்படுத்தினான். இறந்து போன அந்த மனிதனுக்கும் குறிப்பிட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
'அன்று தண்ணீர் கொடுத்திருந்தால் இன்று என் கருணை கிடைத்திருக்கும்' என்றான். அதாவது பிறர் உதவி கேட்டால் முடிந்தளவுக்கு உதவி செய்யுங்கள்.