ADDED : பிப் 20, 2025 08:46 AM
மழையால் சேதம் வர இருப்பதை அறிந்தார் நபி ஹஜ்ரத் நுாஹ். அதனால் தன் மனைவி, மக்களுடன் கப்பலில் ஏறி பாதுகாப்பான இடம் தேடிச் செல்லலாம் எனக் கூறினார். ஆனால் அவரது மகன் கன்ஆன் தந்தையின் பேச்சை கேட்கவில்லை. இறை மறுப்பாளரான காபிர்களுடன் சேர்ந்து கொண்டான். கன்ஆன் உள்ளிட்ட காபிர் அனைவரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
நுாஹ் கப்பலில் கிளம்பியதும் எங்கும் இருள் சூழ்ந்தது. தொடர்ந்து நாற்பது நாட்கள் அடை மழை பெய்தது. அந்த நேரத்தில் கஃபதுல்லாஹ்வை (காபா) பாதுகாக்க இறைவன் அதைச் சுற்றி இயற்கையான தடுப்பை ஏற்படுத்தினான். சுவனத்தில் இருந்து ஒளி வீசும் இரண்டு முத்துக்களை அனுப்பினான். ஒரு முத்து பகலில் சூரியனாகவும், மற்றொரு முத்து இரவில் சந்திரனாகவும் பிரகாசித்தது. இதை வைத்தே நாட்களை அவர்கள் கணக்கிட்டனர்.