ஆட்சியாளரான உமர் தினமும் இரண்டு திர்ஹம் சம்பளம் பெற்றார். சலிக்காத மாவில் செய்த ரொட்டியை சாப்பிட்டார். ஒருமுறை இவரைக் காண உயர் அதிகாரி ஒருவர் வந்தார். அவருக்கும் ரொட்டி பரிமாறப்பட்டது. அதன் சுவை அவருக்கு பிடிக்கவில்லை.
“நீங்கள் ஏன் இந்த எளிய உணவை சாப்பிடுகிறீர்கள்? சலித்த மாவில், நல்ல எண்ணெய்யில் தயாரித்து சாப்பிடலாமே'' எனக் கேட்டார் அதிகாரி.
''இங்குள்ள ஏழைகள் சலித்த மாவு, தரமான எண்ணெய்யில் என்று சாப்பிடுகிறார்களோ, அன்றுதான் நானும் சாப்பிடுவேன். சொல்லப்போனால் பசியால் வாடும் எனக்கு இந்த ரொட்டி சுவையாகவே உள்ளது'' என்றார்.