Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/குறுக்கு புத்தி

குறுக்கு புத்தி

குறுக்கு புத்தி

குறுக்கு புத்தி

ADDED : ஜன 16, 2025 02:30 PM


Google News
மன்னர் முகமது இக்பாலிடம் பத்து வேட்டை நாய்கள் இருந்தன. கூண்டுக்குள் இருக்கும் அவற்றை தன் எதிரி, குற்றவாளிகளைக் கொல்ல பயன்படுத்தினார் மன்னர். ஒருநாள் அவர் கொல்ல நினைத்த நபர் வேறு யாருமல்ல. அவரது அமைச்சர். ஆம். அண்டை நாட்டு மன்னருக்கு ரகசியங்களை தெரிவித்ததால் அமைச்சரை கொல்லத் தயாரானார்.

''மன்னா! பல ஆண்டாக உங்களுக்கு சேவை செய்ததன் பலன் இதுதானா? தண்டனையளிக்கும் முன் பத்து நாள் அவகாசம் கொடுங்கள். அவசர கடமைகளை முடிக்க வேண்டியுள்ளது'' என்றார் அமைச்சர்.

'போனால் போகட்டும்' என மன்னர் அனுமதித்தார். அங்கிருந்து கிளம்பியவர் வேட்டை நாய்களைப் பராமரிக்கும் பணியாளரைச் சந்தித்தார். அவரது உதவியுடன் நாய்களுக்கு உணவிடுவது, பராமரிப்பது என பத்து நாளும் வேலை செய்தார். பதினோராம் நாளன்று வேட்டை நாய்களின் கூண்டுக்குள் அமைச்சர் தள்ளி விடப்பட்டார். ஆனால் அவை அன்புடன் வாலாட்டின.

இதையறிந்த மன்னர் காரணம் கேட்ட போது, ''பத்து நாளாக நாய்களுடன் பழகினேன். அதற்கே அன்பு காட்டுகின்றன. பலஆண்டுகளாக உங்களுக்கு சேவை செய்தும் நீங்கள் கொல்லப் பார்க்கிறீர்கள்'' என்றார் அமைச்சர். '

இன்னும் உன் குறுக்கு புத்தி போகவில்லையா' என கோபித்த மன்னர், முதலைகளுக்கு இரையாக்கும்படி கட்டளையிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us