ADDED : ஜன 13, 2025 08:54 AM
வீட்டருகே சிலர் கட்டட வேலை செய்வதை பார்த்தாள் மஹ்பூபா. ஓரிரு வாரம் கழிந்தது. அப்போதும் பெரிதாக வேலை நடந்த பாடில்லை. முதல் நாள் தான் பார்த்தது போலவே இன்றும் இருந்தது. ''ஐயா... கட்டட வேலை எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்'' எனக் கேட்டாள்.
''நீங்கள் பள்ளத்தின் ஆழத்தை பார்க்காமல் பேசுகிறீர்கள். இரண்டு வருடம் கழித்து பாருங்கள். உங்களால் இங்கு கட்ட இருக்கும் கட்டடத்தின் உயரத்தை நினைத்துப் பார்க்க முடியாது'' என்றனர். ஆழமான, உறுதியான அஸ்திவாரத்தை பொறுத்தே கட்டடம் அமையும். அதைப் போலவே நம்மிடம் ஒழுக்கம் இருந்தால் வாழ்வு சிறக்கும்.