ADDED : நவ 21, 2024 02:31 PM
தனது பணியாளர் ஒருவரை அபூமஸ்வூத் (ரலி) என்பவர் கோபத்தில் தண்டித்தார். அப்போது அவரது பின்புறமாக, 'அபூமஸ்வூதே! பணியாளரிடம் மென்மையாக நடங்கள். இறைவன் அனைத்தையும் அறிவான்' எனக் குரல் கேட்டது. அங்கே நபிகள் நாயகம் நின்றிருந்தார். அபூ மஸ்வூத்திடம், ''தண்டிக்கும் அளவுக்கு ஒருவர் குற்றம் செய்திருந்தாலும், அவரை தண்டிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. மறுமை நாளில் பணியாளரின் துரோகம், பொய்கள் கணக்கிடப்படும். அதுபோல நீங்கள் அவருக்கு செய்த தண்டனைகளும் கணக்கிடப்படும்'' என்றார்.