Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/சிறந்த சேமிப்பு இதுதான்

சிறந்த சேமிப்பு இதுதான்

சிறந்த சேமிப்பு இதுதான்

சிறந்த சேமிப்பு இதுதான்

ADDED : ஆக 20, 2010 04:45 PM


Google News
அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரலி)நாங்கள் அண்ணலார்(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம். ''தங்கத்தையும் வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்'' என்று தொடங்கும் வசனம் இறங்கிற்று. எங்களில் சிலர் ''தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இந்த வசனம் இறங்கியுள்ளது. இதிலிருந்து அதனைச் சேகரிப்பது விரும்பத்தக்கதன்று என்று தெரியவருகின்றது. எந்தச் செல்வம் நல்லது என்று நமக்குத் தெரிந்துவிட்டால் அதனைச் சேகரிக்க நாம் முயற்சி செய்யலாமே!'' என்று கூறினார்கள். அண்ணலார் அவர்கள் கூறினார்கள்: ''அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்புப் பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே!'' என்றார்கள். (திர்மிதி)

விளக்கம்: இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ்வை நாவினால் நினைவு கூர வேண்டும் என்பதும், நன்றியுணர்வுடன் கூடிய தியானமே தேவை என்பதும் தெரிய வருகின்றன. ஒரு மனைவி மார்க்கப்பற்றுள்ள தன் கணவனுடன்- நெருக்கடியான நிலைமைகளிலும், துன்பங்களிலும் பொறுமையுடன் நிலைகுலையாமல் துணை நிற்கின்றாள். தீன்- இறைநெறி வழியில் நடந்திடத் துணையாக விளங்குகின்றாள். தடைக்கல்லாக மாறிடவில்லை எனில், உண்மையில் இத்தகைய மனைவியே அல்லாஹ்வின் பெரும் அருட்கொடையாவாள் என்பதும் தெரிகின்றது. அண்ணல் நபிகளாரின் வாழ்வினிலே....நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us