Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/அறச்செயல்

அறச்செயல்

அறச்செயல்

அறச்செயல்

ADDED : ஜூன் 09, 2023 08:59 AM


Google News
* குடும்பத்தினருக்காக செலவிடுவதும் ஓர் அறச்செயலாகும்.

* ஊகம், அனுமானம், அடிப்படையற்ற கருத்துக்களில் இருந்து விலகி இருங்கள். இது பொய்யாகும்.

* மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவர் நடத்தும் வியாபாரம்தான் சிறந்தது.

* பதவிக்காக ஆசைப்படாதீர்கள். மீறி அதைக் கேட்டுப் பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள்.

* யாரிடமும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை எடுத்து அதன்படி வாழுங்கள்.

* குடிக்க தண்ணீர் கிடைக்காத இடத்தில், ஒருவருக்கு தண்ணீர் வழங்கினால் அவருக்கு வாழ்வு கொடுத்ததற்கு சமம்.

* ஒருவர் திருமணம் செய்துகொண்டால் அவர் இறைவழியில் ஒரு பகுதியை நிறைவு செய்துவிட்டார்.

* தனி மனிதனின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது.

* பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும்.

* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை.

* உங்களிடம் கடன்பட்டவர் வசதியற்றவராக இருந்தால் அவருக்கு வசதி ஏற்படும் வரை காத்திருங்கள்.

-பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us