ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

* நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.
* துன்பப்புள்ளியாக தோன்றும் இந்த மனிதப்பிறவியே, மகான்களைப் பொறுத்தமட்டில் பயிற்சிப் பள்ளியாக அமைந்து நெறிப்படுத்துகிறது.
* தியாகம் செய்யுங்கள். பிறரின் உள்ளத்தை வெல்லும் சக்தி தியாகத்திற்கு மட்டுமே உண்டு.
* கோழையும், முட்டாளும் விதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆற்றல் மிக்கவனோ 'விதியை நானே வகுப்பேன்' என்று சபதம் செய்வான்.
* முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். இதன் மூலம் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
* அன்பின் மூலமாகவே கடமை இனிதாக முடியும். சுதந்திரமான நிலையில் மட்டுமே அன்பு தன் பூரணத்தன்மையுடன் பிரகாசிக்கும்.
* உங்களின் பலவீனத்தை எண்ணுவதால் பலன் சிறிதும் விளையாது. பலவீனத்திற்குப் பரிகாரம் பலத்தை நினைப்பது மட்டுமே.
- விவேகானந்தர்