Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஆன்மிகமே நம் லட்சியம்

ஆன்மிகமே நம் லட்சியம்

ஆன்மிகமே நம் லட்சியம்

ஆன்மிகமே நம் லட்சியம்

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
* முன்னேறிக் கொண்டே இருங்கள். முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாகவே நினைத்தாலும் திருப்பிப் பார்க்காதீர்கள். தவறு நடந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு நன்மை செய்வது தான் தர்மம். மற்றவர்களுக்குத் தீமை செய்வது பாவம்.

* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய மூன்றையும் கொண்ட மனிதனை நசுக்கக் கூடிய ஆற்றல் யாருக்கும் கிடையாது. இந்த பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அவனால் சாதிக்க முடியும்.

* கொழுந்து விட்டெரியும் ஆர்வம் நாலாபுறத்திலும் பரவட்டும். பணியாற்றும் போது ஒரு வேலைக்காரனை போல இருங்கள்.

* ஆன்மிகத்தை லட்சியமாகப் போற்றுங்கள். மேலை நாட்டு நாகரிகத்தின் பின்னால் சென்றால் நம் பண்பாட்டின் அடிப்படை ஆட்டம் கண்டு விடும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us