Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சாந்தமான மனம் வேண்டும்

சாந்தமான மனம் வேண்டும்

சாந்தமான மனம் வேண்டும்

சாந்தமான மனம் வேண்டும்

ADDED : மார் 31, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
* மனிதன் வலிமை பெற வேண்டுமானால், உண்மை மிக்கவனாக வாழ வேண்டும்.

* ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.

* பலவீனத்திற்கு பரிகாரம் பலவீனத்தை சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

* கீதை படிப்பதை விட, கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். அதனால், உடல் வலிமை மிக்கவராக ஆகுங்கள்.

* உலகில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். உங்கள் லட்சியத்தை நோக்கி உறுதியுடன் செயல்படுங்கள்.

* தன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலமே உலகில் மிகப்பெரிய பாவம்.

* சாந்தமான மனநிலை கொண்டவன் நல்லபணிகளில் ஈடுபட்டு, நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

* மனிதர்கள், விலங்குகளை விட ஒழுக்கமானவர்களாக இல்லை. சமூக பொது அபிப்ராயம் தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us