Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கடவுள் நம்பிக்கையின் பலன்

கடவுள் நம்பிக்கையின் பலன்

கடவுள் நம்பிக்கையின் பலன்

கடவுள் நம்பிக்கையின் பலன்

ADDED : அக் 14, 2011 04:10 PM


Google News
Latest Tamil News
* நாம் முதலில் தெய்வங்களாவோம், பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம், 'ஆகுக', 'ஆக்குக' என்பவையே நமது குறிக்கோள்.

* பசியை போக்கிவிட்டு தத்துவ போதனைகளையும், சமய பிரசாரத்தையும் செய்யுங்கள், ஆன்மிகம் எழுச்சி பெறும்.

* மனிதனிடம் ஒளிந்து கிடக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வர புறவாழ்க்கையிலும், அக வாழ்க்கையிலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

* பெண்மையின் இலக்கணமாக சீதை, சாவித்திரி, தமயந்தி ஆகியோர் உள்ளனர். இவர்களை தினமும் நினைத்துப் பாருங்கள்.

* பரம்பொருளாகிய கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் நாம் பலம் பெற்றிருக்கிறோம். சிங்கம் போல் தைரியம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.

* பலமின்மையே துயரத்திற்குக் காரணம். பலவீனம் இல்லாதவனுக்கு மரணமும் இல்லை, துன்பமும் இல்லை.

* இறக்கும் வரை பணி செய்யுங்கள், சம்பாதிக்க வேண்டும் என்ற சாதாரண ஆசையில் முழ்கி ஒரு புழு போல இறப்பதைக் கைவிட வேண்டும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us