Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எது வந்தாலும் போராடு!

எது வந்தாலும் போராடு!

எது வந்தாலும் போராடு!

எது வந்தாலும் போராடு!

ADDED : ஜூன் 30, 2013 05:06 PM


Google News
Latest Tamil News
* உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். உயிர்களுக்கு தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்தவன் ஆவான்.

* நீ செல்லும் பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடினமானது தான் என்றாலும், மனம் தளராமல் குறிக்கோளை நோக்கி முன்னேறு.

* தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதை விடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.

* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். மூளை, தசை, நரம்பு என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.

* எது வந்தாலும் போராடிக் கொண்டிரு. கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us