Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/புன்னகையுடன் திகழுங்கள்

புன்னகையுடன் திகழுங்கள்

புன்னகையுடன் திகழுங்கள்

புன்னகையுடன் திகழுங்கள்

ADDED : பிப் 12, 2011 11:02 PM


Google News
Latest Tamil News
* உனக்குள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளியே காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், உன்னைச் சுற்றியுள்ள எல்லாம்

இசைவாக ஒழுங்குபடுத்தப்படும்.

* நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும்

உன்னிடம் இருக்கும் வரை அனைத்தும் முன்னேற்றமடையும்.

* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும்

வழிபடுங்கள்.

* ஆசைக்கும் கோபத்திற்கும் அடிமையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை ஒருவனால் உய்த்துணர முடியாது.

* எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும்

இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு

செல்லும்.

* சுயநலமே ஒழுக்கக்கேடு, சுயநலமின்மையே

நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம்

கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.

* உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள்,

நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும், இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற

மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us