Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/தாயுமானவர்/வாழ்வில் உயர்பவர் யார்?

வாழ்வில் உயர்பவர் யார்?

வாழ்வில் உயர்பவர் யார்?

வாழ்வில் உயர்பவர் யார்?

ADDED : மே 08, 2011 04:05 PM


Google News
Latest Tamil News
* நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர். பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

* உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும். ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

* தளர்வும், சோர்வும், சலிப்பும் முதுமையை விளைவிக்கிறது என்றால், உறுதியும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.

* உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

* உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்.

- தாயுமானவர்
(இன்று தாயுமானவர் அவதார நாள்)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us