Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

ADDED : ஏப் 30, 2013 11:04 AM


Google News
Latest Tamil News
* குழந்தைகள் விஷயத்தில் மிகவும் பொறுமை தேவை. அவர்கள் மனதில் பதியும் விதத்தில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுப்பது நல்லது.

* பயம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது. எதையும் நேருக்கு நேர் சந்திக்க துணிந்து விட்டால் பயம் காணாமல் ஓடி விடும்.

* மனதிற்குள் இருக்கும் குறை, அருவருக்கத் தக்க விஷயம் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பார்க்க பழகு. அப்படியானால் அதை சீர்படுத்த முடியும்.

* மனதிற்குப் போதுமான வேலை தராவிட்டால் சஞ்சலப்படத் தொடங்கிவிடும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது சிறந்த பணி.

* தன்வசமில்லாத நேரத்தில் தான் ஒருவனுக்கு கோபம் உண்டாகிறது. உன்னையே உன்னால் அடக்க முடியாவிட்டால் மற்றொருவராலும் அடக்க முடியாது.

* பிரச்னையைக் கண்டு வருந்தாதீர்கள். 'எல்லாம் நன்மைக்கே' என்ற முழுநம்பிக்கை எப்போதும் மனதில் இருக்கட்டும். இந்த எண்ணம் கவசம் போல பாதுகாப்பு தரும்.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us