Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/உதவினாலும் உதைக்கும் உலகம்

உதவினாலும் உதைக்கும் உலகம்

உதவினாலும் உதைக்கும் உலகம்

உதவினாலும் உதைக்கும் உலகம்

ADDED : ஆக 28, 2008 07:33 PM

Google News
Latest Tamil News

உங்களிடமுள்ள மிகச்சிறந்த குணங்களையும், பொருட்களையும் உங்களிடமே வைத்துக்கொள்ளாதீர்கள். அப்படி வைத்திருந்தால் அது அப்படியே தேங்கிவிடும். அதனை உலகுக்கு கொடுத்து விடுங்கள். அதன்பின்பு அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல், அத்துடன் மறந்து விடுங்கள். அதற்காக உலகத்தாரிடம் இருந்து பிரதிபலனையும், மரியாதையையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தாலும் அந்த மரியாதை கிடைக்கப்போவதில்லை. மாறாக, உலகம் உங்களை மதிக்காமல் கீழே தள்ளிவிடலாம். நீங்கள் அதற்காக தயங்கிவிடாமல் உலகத்தாருக்கு உதவி செய்யுங்கள்.

மக்கள் உண்மையிலேயே உதவியை எதிர்பார்த்துதான் இருக்கிறார்கள். ஆனால், அதை வெளியில்தான் காட்டிக்கொள்வதில்லை. ஆகவே, அவர்களுக்கான உதவியை உடனே செய்து விடுங்கள். உதவி கிடைத்தபின்பு அவர்களே உங்களை எதிர்த்து நிற்கலாம். அதற்காக, உதவி செய்யும் குணத்தை நிறுத்தி விடக்கூடாது. அது அவர்களது இயற்கை குணம் என்பதை புரிந்து கொண்டு உங்கள் கடமையில் இருந்து தவறாமல் செயல்படுங்கள்.

நீங்கள் உலகிற்கு செய்யும் நன்மையான செயல்கள் நாளையே மறக்கப்பட்டு விடலாம். உங்களது உண்மையான குணமும், வெள்ளை உள்ளமும் உங்களை அபாயத்திற்கு கொண்டு செல்லலாம். அதற்காக நீங்கள் கலங்கக்கூடாது. எவ்வளவு சோதனை வந்தாலும், சுற்றத்தாருக்கு இயன்ற அளவிற்கு நன்மை செய்யுங்கள். அதுவே, இந்த பிறப்பை எடுத்ததற்கான புண்ணியத்தை தரும்.

Our Apps Available On

Dinamalar

Follow us