Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/மனிதன் ஒரு பொம்மை

மனிதன் ஒரு பொம்மை

மனிதன் ஒரு பொம்மை

மனிதன் ஒரு பொம்மை

ADDED : நவ 07, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
* அறிவைக்கொண்டு ஒரு திட்டத்தை வகுத்தாலும், அதை நிறைவேற்றுவதை, நீங்கள் வணங்கும் தெய்வமே நிர்ணயம் செய்யட்டும் என விட்டுவிடுங்கள்.

* நேர்மை இருக்கும் வரை, இறைவனது அருள் உண்டு. நேர்மையாளர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் தெய்வம் துணை நிற்கும்.

* இறைவனின் அருளாட்சியில் தீமையென்பதே இல்லை. நலம் மட்டுமே நடக்கும்.

* நம்மை ஆட்டிவைக்கும் சக்தியான இறைவனின் கையில், நாம் ஒரு விளையாட்டுப் பொம்மையே. 'நாம் பெரிய ஆள்' என்று நமக்கு நாமே சிந்திப்பதெல்லாம் ஒரு மாயத் தோற்றமே.

* அனைத்து காலத்திலும் மனிதன் ஓர் அறிவிலியாகத் தோன்றுகிறான். இதுதான் தெய்வத்துக்கும் மனிதனுக்கும் உள்ள மாறுபாடு.

* தூய்மையான இதயத்தை அறிந்தவர்கள் இறைவனை அறிந்தவர்களாவர்.

* போராட்டம், பிடிவாதம், பலாத்காரம், எதிர்பாராதவினை ஆகியவற்றின் மூலமாக இயற்கையை உடைமைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவனிடமிருந்து தன் உண்மையான சொரூபத்தை மறைத்துக் கொள்ளும் இறைவனே மனிதன்.

-அரவிந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us