Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/ஒரு அடி வைத்தால் போதும்

ஒரு அடி வைத்தால் போதும்

ஒரு அடி வைத்தால் போதும்

ஒரு அடி வைத்தால் போதும்

ADDED : ஆக 16, 2008 09:45 AM


Google News
Latest Tamil News
<P>மனிதனின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கை. ஒரு மனிதனுடைய சிரத்தை, நம்பிக்கை எப்படியோ அதைப் பொறுத்துத் தான் அவனது வாழ்க்கை அமையும் என்று கீதை நமக்கு போதிக்கிறது. நம் வாழ்க்கை குறிக்கோள் இல்லாவிட்டால் பயனற்றதாகிவிடும். ஆனால் குறிக்கோள் என்பது வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. மிகவும் உயர்ந்ததாக, சுயநலமற்றதாக இருக்க வேண்டும்.<BR>&nbsp;நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்து விட்டால் அவன் தன்னுடைய சொந்த சக்தியையே நம்முள் ஊற்றுவான். யாருக்கு எதைக் கொடுத்தாலும் எல்லா உயிர்களிடத்தும் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கே கொடுக்கிறோம் எனும் உணர்வுடன் கொடுக்க வேண்டும். கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாலும் போதும். உடனே அவர் நம்மை நோக்கி நூறு அடிகள் எடுத்து வைப்பார். இடையூறு எப்போதும் நம் உள்ளத்தில் தான் இருக்கிறதே ஒழிய, நம் சுற்றுச்சூழலில் இல்லை. ஆனால், நம்மைத் தொடரும் இடைஞ்சல்கள் யாவும் நமக்கு வெளியில் இருந்து வருவதாகவே தவறாக எண்ணுகிறோம். கருணையும், இனிமையும் தெய்வத்தின் குணங்கள் ஆகும். இந்நல்ல குணங்களை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தானும் தெய்வநிலைக்கு உயர்வான். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us