Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இப்படியும் வீடு கட்டலாம்

இப்படியும் வீடு கட்டலாம்

இப்படியும் வீடு கட்டலாம்

இப்படியும் வீடு கட்டலாம்

ADDED : செப் 14, 2012 10:09 AM


Google News
Latest Tamil News
* பால், பழம், விதைகள் போன்ற உணவை சாப்பிடுங்கள். அது நல்ல சிந்தனைகளை தரும்.

* எப்போதும் இறைவனைச் சார்ந்து, அவரையே எண்ணிக்கொண்டிருங்கள். அதுவே மிகப்பெரிய தியானம்.

* சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால் அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத்தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் இருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் அடித்தளமாக மனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வீட்டினால் பயன் ஏதுமில்லை.

* விருப்பங்களின் தொகுப்பே மனம். ஆனால், விருப்பமில்லாத மனம்தான் சுத்தமாக இருக்கும்.

* இறைவன் ஒவ்வொருவரிடமும் அமைதியின் மூலமாகவே பேசுகிறார். ஆகவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.

* இறைவன், உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்தைப்போல இருக்கிறார் மனப்பூர்வமான பக்தியினால், இறைநிலையை யாராலும் அடைய முடியும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us