ADDED : அக் 11, 2010 07:10 PM

* நாம் ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது வாழ்நாளில் ஒருநாளை விட்டு விடுகிறோம். காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. காலம் என்னும் தத்துவத்தைக் கடந்து நிற்பவர் கடவுள். காலம் முடிவதற்குள் கடவுள் பக்கம் மனதைத் திருப்ப முயலுங்கள்.
* வாழ்க்கையை ஒரு சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் உண்மையைக் கடைபிடியுங்கள். அப்போது சாந்தமும், தர்மமும், சவுபாக்கியமும் தானாக உங்களைத் தேடி வந்துவிடும்.
* மீண்டும் மனிதப்பிறவி நமக்கு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். அதனால் கிடைத்த பிறவியைப் பயனுடையதாக்கிக் கொள்வது நம் கடமை.
* மனதின் இயல்பு அமைதியற்று இருப்பது தான். ஒரு கணம் மனதால் சும்மா இருக்க முடியாது. சலனப்படும் மனதை கட்டுவதற்கு எளிதான ஒன்று தான் இருக்கிறது. அது கடவுளுடைய நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பதாகும். இதனால் மனம் ஒருமுகப்படத் தொடங்கும்.
சாய்பாபா