Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தங்கபஸ்பம் என்றால் என்ன?

தங்கபஸ்பம் என்றால் என்ன?

தங்கபஸ்பம் என்றால் என்ன?

தங்கபஸ்பம் என்றால் என்ன?

ADDED : மார் 22, 2011 09:03 AM


Google News
Latest Tamil News
* பசு மேய்ந்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்து அசை போடுகிறது, அதேபோல் நாமும் அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு அமைதியாக அவற்றின் பொருளை சிந்தித்து செயல்பட வேண்டும்.

* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதைவிட, ஓர் அரிய செயலைச் செய்தல் நல்லது.

* பொருள் இருந்தால் தான் என்றில்லை, உடல் வலிமையாலும், உள்ளத்திலிருந்து வரும் சொற்களாலும் பிறருக்கு உதவலாம்.

* 'தேன்' என்று சொன்னால் இனிக்காது, அதை உண்ண வேண்டும், 'சேவை' என்று சொன்னால் போதாது, செய்ய வேண்டும். செல்வம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றை சமுதாயத்திற்கு செலவழிப்பவன் போற்றத்தக்கவன்.

* பிறரிடம் உதவி பெறாமல் வாழ்வது, உங்களுக்கு நீங்களே செய்யும் சேவை.

* தன்னைக் கல்லால் அடித்தவனுக்கும் மரம் இனிய கனியைத் தருகிறது. நம்மைச் சொல்லால் அடிப்பவருக்கு கனிவான சொற்களைத்தர வேண்டும்.

* தன்னம்பிக்கை என்பது தங்க பஸ்பம். அது இருந்தால் மட்டுமே ஆரோக்கியம் என்ற ஆனந்தம் கிட்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us