Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சத்தியமே உயர்ந்த தர்மம்

சத்தியமே உயர்ந்த தர்மம்

சத்தியமே உயர்ந்த தர்மம்

சத்தியமே உயர்ந்த தர்மம்

ADDED : ஏப் 30, 2009 08:08 AM

Google News
Latest Tamil News

* நல்லதையே பார். நல்லதையே கேள். நல்லதையே செய். நல்லதையே நினை. அப்போது நிச்சயம் கடவுளின் அருள் உனக்கு கிடைக்கும். எல்லாவிதமான தீமைகளும் உன்னை விட்டு அறவே விலகிவிடும்.
* உடல் நலிவுற்றவன் உணவை வெறுப்பான். ஏனென்றால் நல்ல உணவைக் கூட அவனால் சுவைத்து உண்ணமுடிவதில்லை. அதுபோல உள்ளம் நலிவுற்ற மனிதர்கள் கடவுளை வெறுக்கின்றனர். அவர்களுக்கு, மேலான பரம்பொருளைச் சிந்திக்கும் ஆற்றல் இருப்பதில்லை.
* சொர்க்கத்தை தேடி நாம் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை முறை, நல்லொழுக்கம், பிறரிடம் தூய அன்பு, பசு முதலிய வாயில்லா ஜீவன்களிடமும் காட்டும் தயை இவை உடைய மனிதன் இருக்கும் இடமே சொர்க்கம்.
* இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடித்துவிடும். அதே இரும்பு நெருப்புடன் சேர்ந்தால் தூய்மை பெறும். அதுபோல, நீங்கள் யாரோடு பழகுகிறீர்களோ அவருடைய தன்மையைப் பெறுவீர்கள். நல்லவர்களோடு பழகினால் நம்மையும் அறியாமல் நாம் நல்ல இயல்புகளைப் பெறுவோம்.
* இயலாதவர்களுக்கு நம்மால் ஆன சேவையைச் செய்வதை விடவும் மேலான பிரார்த்தனை வேறு கிடையாது.

Our Apps Available On

Dinamalar

Follow us