Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/முயற்சிக்கு தகுந்த பலன்

முயற்சிக்கு தகுந்த பலன்

முயற்சிக்கு தகுந்த பலன்

முயற்சிக்கு தகுந்த பலன்

ADDED : நவ 05, 2009 04:37 PM

Google News
Latest Tamil News

* கிணற்றுக்கோ, ஏரிக்கோ ஏன் சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும் நம் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவுக்குத் தான் தண்ணீரை எடுக்க முடியும். அதுபோல, நம் செய்யும் செயலில் நம் முயற்சிக்கு தகுந்தவாறே பலன் கிடைக்கும்.
* தொடக்கத்தில் கறையான் சிறியதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதுமே செல்லரித்துப் போகக்கூடும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும்.
* இன்று சாப்பிட உணவை இன்றே ஜீரணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவ்வுணவு அஜீரணம் ஆகிவிடும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்ற நல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த முயலவேண்டும். இல்லாவிட்டால் அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை.
* சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலைமுடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரைமனதுடன் இறங்கக்கூடாது. கடவுளை அடைய வேண்டும் என்ற தணியாத ஆர்வமும், தீவிரமான மனநிலையும் தேவை.
-சாய்பாபா

Our Apps Available On

Dinamalar

Follow us