Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அன்பெனும் விதை விதையுங்கள்

அன்பெனும் விதை விதையுங்கள்

அன்பெனும் விதை விதையுங்கள்

அன்பெனும் விதை விதையுங்கள்

ADDED : ஆக 31, 2010 07:08 PM


Google News
Latest Tamil News
* தியானத்தில் அமர முடியவில்லையே, தெய்வவழிபாடு செய்ய முடியவில்லையே என்று ஏங்காதீர்கள். வீட்டில் வழக்கமான பணிகளை வழிபாடாக்குங்கள். சமையலும் ஒரு தியானமே.

* காய்கறிகளை நறுக்கும் போது வேண்டாதவற்றை நறுக்கித் தள்ளுவது போல, வேண்டாத தீய குணங்களை மனதிலிருந்து தூக்கி

எறியுங்கள். காய்கறிகளை தண்ணீரில் போடுவதுபோல, அருள் என்னும் மழையில் மனம் நனையட்டும்.

* காய்கறிகளை வேக விடுவதுபோலவே, மனதை ஞானத்தீயில் வேக விடுங்கள். இப்படி எண்ணும்போது நாம் செய்யும் சமையல் வேலையும் தெய்வப்பணியாகிவிடும்.

* தெய்வம் என்னும் ஆதார சக்திக்கு பணி செய்யும்

கருவியாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மனதை தெய்வீகமாக்கிக் கொண்டு ஆனந்தமாக இருங்கள்.

* அன்பு என்னும் விதை விதைத்து மெய்யுணர்வை

அறுவடை செய்யுங்கள். அருள் என்னும் நீர் பாய்ச்சுங்கள். விதையில் மரத்தின் தன்மை முழுமையாக இருப்பதைப் போலவே எண்ணத்தில் எல்லாமே அடங்கி இருக்கிறது.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us