Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லதை மட்டும் தேடுங்கள்

நல்லதை மட்டும் தேடுங்கள்

நல்லதை மட்டும் தேடுங்கள்

நல்லதை மட்டும் தேடுங்கள்

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
* வாழ்க்கை இன்னதென்று மிருகங்களுக்கு தெரிவதில்லை. மனிதனும் அப்படி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் மிருகத்தை விட மேம்பட்டவன் அல்ல.

* சட்டத்தை உருவாக்குபவர்கள் அதற்கு கீழ்ப்படிதல் வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் சட்டத்திற்கு மதிப்பளித்தால் மக்களும் மதிப்பளிப்பார்கள்.

* மனிதப்பிறவி மதிப்பு மிக்கது. கடவுளின் வெகுமதியான இப்பிறவியைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பெரும்பாவம் செய்தவறாகி விடுவோம்.

* உடல் படகு போன்றது. பிறவி என்னும் ஆற்றைக் கடந்து கரைசேர படகின் உதவி தேவை. அதுவரை படகில் ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* உள்ளத்தில் கடவுளை நிலைநிறுத்துங்கள். நல்லுணர்வு என்னும் மலர்களால் அவரை அழகு படுத்துங்கள்.

* பிறரிடம் குறை தேடாதீர்கள். அதே சமயம், நற்குணங்களை பாராட்டாமல் இருக்கக் கூடாது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us