Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/விடாமுயற்சி அவசியம்

விடாமுயற்சி அவசியம்

விடாமுயற்சி அவசியம்

விடாமுயற்சி அவசியம்

ADDED : டிச 25, 2012 09:12 AM


Google News
Latest Tamil News
* கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். அதனால், நம் வாழ்வின் நோக்கம் கடவுளை அறிவதாக இருக்கட்டும்.

* நல்ல சிந்தனைகளை கேட்டால் மட்டும் போதாது. அதை அன்றன்றே நடைமுறை படுத்த வேண்டும்.

* வாழ்வில் கஷ்ட நஷ்டங்களைத் தவிர்க்க முடியாது. அவற்றை மறந்து விடாமுயற்சியோடு உழைத்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

* தளராத நம்பிக்கை, மனத்தூய்மை, தொண்டு மனப்பான்மை இந்த மூன்றும் நம்மிடம் இருந்தால் தான் கடவுளின் அருளை நாம் பெற முடியும்.

* பொறாமை ஒரு நஞ்சு. மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு ஒருபோதும் பொறாமைப்படுவது கூடாது.

* அளவான பேச்சு, ஒருவரிடம் தெய்வ பலத்தை அதிகரிக்கச் செய்யும். சமூகத்தில் நன்மதிப்பை உண்டாக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

* கடவுளின் திருநாமத்தை எப்போதும் மறவாது இருங்கள். நாள் முழுக்க நாமஜபத்தில் ஈடுபடுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us