Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/காகிதத்தையும் கடவுளாக்கலாம்

காகிதத்தையும் கடவுளாக்கலாம்

காகிதத்தையும் கடவுளாக்கலாம்

காகிதத்தையும் கடவுளாக்கலாம்

ADDED : ஜூன் 02, 2009 04:50 PM

Google News
Latest Tamil News

* தூய்மையற்ற சிந்தனைகளை படித்தால், அசுத்தமான எண்ணங்கள் மனக்கண்ணாடியில் வழியே இதயத்திரையில் படிந்து விடும். ஆகையால் நல்லதிசையில் மனதைத் திருப்ப நல்லதைச் செய்ய வேண்டும்.
* ஒரு படத்தைக் கடவுளாக வணங்கலாம். கடவுளைப் படமாகக் கருதக்கூடாது. ஒரு கல்லை, மண்ணை, காகிதத்துண்டைக் கடவுள் நிலைக்கு உயர்த்தலாம். ஆனால், கடவுளைக் கல்லாகவும், காகிதத்துண்டாகவும் கீழ் நிலைக்கு இறக்கி விடக்கூடாது.
* மனித இதயத்தில் பெருந்தீக்கள் எரிகின்றன. கோபத்தீ, காமத்தீ, பாசத்தீ, ஆசைத்தீ இப்படி பலவிதமான நெருப்புகள் கனன்று கொண்டிருக்கின்றன. அவற்றை வளர விடக்கூடாது. வளரவிட்டால் நம்மை அவை அழித்து விடும்.
* கடந்து போன வசந்தம், இளமை இவையெல்லாம் போனால் போனது தான். வாழ்க்கை ஒரே திசையில் மட்டும் செல்லும்நீரோட்டம் என்பதால், அதைப் பயனுள்ள வகையில் செலவழிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
* தொண்டாற்றினால் உங்கள் திறமையை, தொண்டுசெய்ததை பிறர் அறிய வேண்டும் என்பதற்காக தற்பெருமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அடக்கமாக இருங்கள். பிறருக்கு தொண்டாற்ற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

Our Apps Available On

Dinamalar

Follow us