Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பணம் ஒரு பொருட்டே அல்ல!

பணம் ஒரு பொருட்டே அல்ல!

பணம் ஒரு பொருட்டே அல்ல!

பணம் ஒரு பொருட்டே அல்ல!

ADDED : மே 26, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
* செல்வம் குறைந்திருந்தாலும், ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வாக கருதப்படுகிறது. பெரும் புகழ் அவர்களைத் தானாக வந்து சேர்கிறது. காரணம் செல்வம் நிலையற்றது, ஒழுக்கம் நிலையானது. பணம் இல்லை என்பது ஒரு குறையே கிடையாது.

* பணம் இருந்தால் தான் பிறருக்கு உதவ முடியும் என எண்ண வேண்டாம், உடல் வலிமையாலும், உள்ளத்திலிருந்து வரும் சொற்களாலும் கூட உதவலாம்.

* ஊதுபத்தியும், மெழுகுவர்த்தியும், சந்தனக்கட்டையும் பிறருக்கு உதவுவதற்காகத் தம்மையே அழித்துக்

கொள்கின்றன. ஆனால் மனிதன் தனக்காகப் பிறரை அழிக்கும் போக்கை கைவிட்டு பிறருக்கு உதவ முன் வரவேண்டும்.

* தேர்வு நன்றாக எழுதியவனுக்கு முடிவைப் பற்றிக் கவலை இல்லை. தன்னலமற்ற சேவை செய்த தொண்டனுக்கும் முடிவைப் பற்றிக் கவலை இல்லை.

* பிறர் தவறு செய்யும் போது மட்டும் நமது கண்கள் பூதக் கண்ணாடி அணிந்து கொள்கிறது, வாய் ஒலி பெருக்கியாய்விடுகிறது. இதனை தவிர்த்து, வாயையும், கண்ணையும் நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us