Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அதிகாலையில் இறைவனை பாடுவோம்

அதிகாலையில் இறைவனை பாடுவோம்

அதிகாலையில் இறைவனை பாடுவோம்

அதிகாலையில் இறைவனை பாடுவோம்

ADDED : பிப் 12, 2009 05:47 PM


Google News
Latest Tamil News
<P>* அதிகாலைப் பொழுதில் எழுந்து நீராடிவிட்டு, இறைவனின் திருநாமங்களை சொல்லிப் பாடி மகிழ்வதால் சுயகட்டுப்பாடு உண்டாகும். நாமசங்கீர்த்தனம் என்பது ஒன்றும் புதியது அல்ல. காலம் காலமாக இந்த மண்ணில் நடந்து வருவது தான். இதை வீதிகளில் முழங்குவது தூங்குபவர்களை எழுப்புவதற்காக மட்டும் அல்ல. அது நம்முள் தூங்கிக் கிடக்கும் ஆன்மிக உணர்வினைத் தட்டி எழுப்புவதற்காகத் தான். <BR>* அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள். நீராடி குழுவாக இறைநாமங்களைப் பாடி வாருங்கள். பாடுவதற்கு தூய நல்ல எண்ணங்கள் கொண்ட அமைப்பினை உருவாக்குங்கள். நாம சங்கீர்த்தனத்தால் வேண்டாத அனாவசியமான வெறுப்பு, கோபம் போன்ற தீயகுணங்கள் நம்மை விட்டு முற்றிலும் விலகி விடும்.<BR>* தேவையற்ற வீண்பெருமை, கர்வம் போன்றவை நாம சங்கீர்த்தனத்தால் நீங்கி விடும். நாம் குணத்தில் மேம்பாடு அடைவோம். நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நல்ல சிந்தனைவயப்பட்டவர்களாக மாறத் தொடங்குவார்கள். ஒவ்வொரு நாளையும் பகவத் சிந்தனையுடன் தொடங்க இச்செயல் உதவி செய்யும். எல்லாவற்றையும் அறிந்த பேரறிவாளனான இறைவன் நமது நல்ல முயற்சிகளுக்கும் அருள்புரியத் தொடங்குவான். ஆன்மிக வாழ்வில் சாதனையை எளிதாக அடைய இதை விடச் சிறந்தது வேறு இல்லை. </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us