Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உண்மையை நேசிப்போம்

உண்மையை நேசிப்போம்

உண்மையை நேசிப்போம்

உண்மையை நேசிப்போம்

ADDED : மே 20, 2013 11:05 AM


Google News
Latest Tamil News
* பெற்றோருக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் பெற்றோராகும்போது பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள்.

* பெற்றோரை மனிதர்களாக மட்டுமல்லாது, நடமாடும் தெய்வங்களாகவும் மதித்து நடக்க வேண்டும்.

* உடல் படகு போன்றது. வாழ்வோ ஓடும் ஆறு போன்றது. ஆற்றைக் கடந்து அக்கரை சேரும் வரை படகு ஓட்டையாகி விடாமல் காத்துக் கொள்ளுங்கள்.

* நல்லவற்றைக் காண்பதே கண்களின் பணியாக இருக்கட்டும். நல்லதைக் கேட்பதே காதுகளின் செயலாக இருக்கட்டும்.

* உங்களிடமுள்ள குற்றங்களைத் தேடி திருத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உள்ள குணங்களைத் தேடிப் பாராட்டி மகிழுங்கள்.

* உலகம் உண்மையும், பொய்யும் கலந்த கலவை. இதில் உண்மையை மட்டும் நேசித்து வாழ்வோம்.

* ஐம்புலன்களை அடக்கி விட்டால் அவை நமக்கு நண்பர்கள். அவற்றிற்கு நாம் அடிமையாகி விட்டால் அவை எதிரிகள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us